Also Watch
Read this
திரையில் ஹீரோவாக நடித்து கோடிக் கணக்கில் சம்பாதிப்பதும், ரசிகர்களின் கைதட்டலில் மிதப்பதும் பலருக்குக் கிடைக்காத வாய்ப்பு.
ஆனால், புகழின் உச்சத்தில் இருந்தபோதே, அந்த சொகுசு வாழ்க்கையை தூக்கியெறிந்துவிட்டு, தாய்நாட்டின் எல்லை காக்க நிஜ போர்க் களத்திற்குச் சென்ற ஒரு நடிகரை தெரியுமா?
கார்கில் போரில் துப்பாக்கி ஏந்தி வீரர்களுடன் தோளோடு தோள் நின்ற நானா படேகரின் அந்த வீரம் செறிந்த நாட்டுப் பற்று மெய் சிலிர்க்க வைக்கிறது.

ராணுவ அதிகாரியாக நடிக்க...
1991ஆம் ஆண்டு வெளியான ’பிரஹார்’ திரைப்படத்தில் நடிகர் நானா படேகர் ராணுவ அதிகாரியாக நடிக்க வேண்டும் என்பதற்காக, எந்த குறுக்கு வழியையும் தேடாமல் மராத்தா லைட் இன்ஃபாண்ட்ரி வீரர்களோடு இணைந்து, 3 ஆண்டுகள் கடுமையான ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டார்.
அந்தப் பயிற்சி அவரது உடலை மட்டுமல்ல, உயிரையும் தாய்நாட்டின் மீதான கடமையுணர்ச்சியால் நிரப்பியது. அதன்பின், சினிமாவுக்காக இல்லாமல் நாட்டின் பாதுகாப்புப் படைகளுள் ஒன்றான Territorial Armyயில் ஒரு வீரராகவே தன்னை இணைத்துக் கொண்டார்.

கார்கில் போரின் போது...
1999ஆம் ஆண்டு கார்கில் மலையடிவாரத்தில் பனிப்பொழிவுக்கு நடுவே இந்தியா மீதான போர் மூண்டது. நாடே ஆபத்தில் இருந்தபோது, தான் ஒரு பிரபலம் என்பதையெல்லாம் மறந்து, அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸிடம் நேரில் சென்று அனுமதி கேட்டுள்ளார். விரைவு அதிரடிப் படையில் இணைந்து, ஸ்ரீநகர், டிராஸ், லே என உயிரைப் பணயம் வைக்கும் உறைபனிப் பகுதிகளுக்கு சென்றார்.

முன்னணி நடிகராக இருந்தவர், போர்க்களத்தில் பசியோடும் பட்டினியோடும், குண்டுமழைகளுக்கு இடையே 60 நாட்கள் சக வீரர்களுக்கு ஆதரவாக நின்றார்.
போர் முடிந்து அவர் திரும்பி வந்தபோது, நானே படேகர் இருபது கிலோ எடை குறைந்திருந்தார். ஆனால், அவரது நெஞ்சில் தாய்நாட்டிற்காகச் சிந்திய வியர்வையும் தியாகமும் அழியாமல் இருந்தது.

தாய்நாட்டின் காவலனாக...
வெறும் வசனம் பேசும் பலருக்கு மத்தியில், தன் செயலால் அதை நிருபித்துக் காட்டியவர் நானா படேக்கர். திரையில் மட்டுமே ஹீரோக்கள் உருவாகும் காலத்தில், நிஜ வாழ்விலும் தாய்நாட்டின் காவலனாக வாழ்ந்து காட்டிய நானே படேகருக்கு ஒரு சல்யூட்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved