புஷ்பா - 2 படம் வரும் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், அதன் டிக்கெட் விலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜுன் நடித்துள்ள இந்தப் படம் தெலங்கானாவில் வரும் 4ஆம் தேதி இரவு 9.30 மணி முதலே திரையிடப்படும் நிலையில், டிக்கெட் விலை 1,120 முதல் 1,240 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மும்பை பிவிஆர் சினிமாஸ் திரையரங்கில் முதல் நாள் டிக்கெட் விலை 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.