Also Watch
Read this
By: Manigandan Raja

முதல்வர் விஜய்க்கு எனது சல்யூட் எனவும் துருவ் பேட்டி
முதலமைச்சர் விஜய் தொலைநோக்கு பார்வையும், புரட்சிகர சிந்தனையும் கொண்டவர் என நடிகர் துருவ் விக்ரம் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், முதலமைச்சர் விஜய்யின் பயணம் மற்றும் இந்த புதிய அத்தியாயத்தின் மீதான அவரது நம்பிக்கையை தாம் மிகவும் மதிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பல தலைமுறைகளுக்கு அவர் உத்வேகமாக இருந்துள்ளதாகவும், அவரால் ஈர்க்கப்பட்டவர்களில் தானும் ஒருவன் எனவும் கூறியுள்ள அவர், முதல்வர் விஜய்க்கு சல்யூட் என தெரிவித்துள்ளார்.
பராசக்தி" திரைப்பட நடிகை ஸ்ரீலீலா மெய்சிலிர்ப்பு
ரசிகர்களை நேரடியாக சந்திக்கும்போது, அவர்கள் காட்டும் அன்பும், ஆரவார வரவேற்பும் தன்னை திக்குமுக்காட செய்வதாக நடிகை ஸ்ரீலீலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தாம் பணம் சம்பாதிக்கும்போதும், புகழடையும்போதும்கூட இந்த மகிழ்ச்சி கிடைத்தது இல்லை எனவும், ரசிகர்களால் மட்டுமே எல்லாமே சாத்தியமாவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தகைய அன்பை பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும் எனவும், இதற்காக நடிகையாக இருப்பதற்கே தாம் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக ஏ.ஆர்.ரஹ்மான்
தமிழ் சின்னத்திரை வரலாற்றில் புதிய திருப்பமாக, ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முதல்முறையாக தொலைக்காட்சி இசை ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பொறுப்பேற்க உள்ளார்.

‘சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா’ தமிழில் ‘சோனி விழா’ என்கிற புதிய பொது பொழுதுபோக்கு சேனலை அக்டோபர் மாதம் அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளது. இதில், ‘தமிழ் ஐடல்’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேனலில்தான் நடுவராக ஏ.ஆர்.ரஹ்மான் பொறுப்பேற்க உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved