Also Watch
Read this
By: Manigandan Raja

தர்மன் திரைப்படத்தில் கதாபாத்திரம் கேட்டுள்ளேன்
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தமக்கு நண்பர் மட்டுமல்ல; வழிகாட்டியும் கூட என நடிகை கயாடு லோஹர் தெரிவித்துள்ளார். எந்த முடிவிலும் குழப்பம் ஏற்பட்டால் அவரிடம் ஆலோசனை கேட்பதாக கூறியுள்ள அவர், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ‘தர்மன்’ படத்தில் தமக்கு ஒரு கதாபாத்திரம் வழங்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், அதற்காக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும் கயாடு லோஹர் கூறியுள்ளார்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் வெளியீடு
‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட உமாசங்கர் மீதான தடுப்புக் காவல் உத்தரவை எதிர்த்து, அவரது சகோதரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு குறித்து நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
நடிகர் சஞ்சய் தத்துக்கு அம்மாநில அமைச்சர் கோரிக்கை
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மராத்தியில் பேசுமாறு மகாராஷ்டிர போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக், நடிகர் சஞ்சய் தத்துக்கு விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்தார்.

இதற்கு பதிலளித்த சஞ்சய் தத், ஏர்வாடா சிறையில் ஆறு ஆண்டுகள் இருந்தும் மராத்தி கற்றுக்கொள்ளவில்லை என நகைச்சுவையாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved