Also Watch
Read this
By: Fyrose Banu

திருவள்ளூரில் இளைஞர்களிடம் விற்பனை செய்வதற்காக போதை மாத்திரைகளை வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி.வி.சாய் பிரனீத் உத்தரவின் பேரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் திருவள்ளூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையில் போலீசார் பெரியகுப்பம் பகுதியில் உள்ள சினிமா திரையரங்கம் அருகே நேற்று மாலை ரோந்து பணியை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர்கள் 2 பேரும் திருத்தணி பகுதியைச் சேர்ந்த ஷாம் சுந்தர் (28) மற்றும் அப்ரித் (18) என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3,789 போதை மாத்திரைகளை இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved