news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 23.50 சவரன் தங்க நகைகள் அபேஸ்!
tv

Also Watch

tv

Read this

23.50 சவரன் தங்க நகைகள் அபேஸ்!

திருப்பத்தூர்

25

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
vlr 4

ஜோலார்பேட்டை நகர கூட்டுறவு வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்ட 23.50 சவரன் தங்க நகைகள் அபேஸ்! ஒரு வருட காலமாக நடையாக நடக்கிறோம்! முறையான விசாரணை இல்ல! கதறிய பி.எஸ்.என்.எல். துணை கோட்ட பொறியாளர்!

ஏமாற்றிய கூட்டுறவு வங்கி
ஜோலார்பேட்டை அடுத்த பாபு நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மனைவி சரண்யா குமாரி (57) இவர் ஜோலார்பேட்டை நகர கூட்டுறவு வங்கியில் சுமார் 15 வருட காலமாக கணக்கு வைத்து வருகிறார்.

வங்கி பெட்டகத்தில் வைக்கப்பட்ட நகைகள் மாயம்
இந்தநிலையில் கடந்த 2024 ஆம் வருடம் 29ஆம் தேதி அந்த வங்கியில் 30,000 டெபாசிட் மற்றும் வருடாந்திர தொகை ரூ.2,360 செலுத்தி நகைகளை வைக்க பாதுகாப்பு பெட்டகம் பெற்று 30.50 சவரன் தங்க நகையை வைத்துள்ளார்.ஆனால் அந்தப் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவியை வங்கி ஊழியர் 30ஆம் தேதி கொடுத்ததாக கூறப்படுகிறது.

23.50 சவரன் தங்க நகைகள் அபேஸ்
அப்போது சரண்யாகுமாரி பாதுகாப்பு பெட்டகத்தை திறந்த பார்த்தபோது பெட்டகத்தில் வைக்கப்பட்ட 23.50 சவரன் தங்க நகை மட்டும் காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்து சரண்யாகுமாரி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நகை மீட்டு தர கோரி எஸ்.பி. அலுவலகம், DIG, IG உள்ளிட்ட அதிகாரிகள் பல பேருக்கு மின்னஞ்சல் மூலமும் ரிஜிஸ்டர் தபால் மூலமும் புகார் அளித்து வந்துள்ளார்.

ப்ராப்பர் இன்வேஸ்டிகேஷன் இல்ல!
ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் திரும்பவும் இன்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு முறை புகார் அளித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் பி.எஸ்.என்.எல். துணை கோட்ட பொறியாளர் நாகராஜன், கடந்த ஒரு வருடமாக எங்களுடைய நகைக்காக போராடி வருகிறேன் ஆனால் போலீசார் முறையான விசாரணை நடத்தவில்லை என வேதனை தெரிவித்தார். தயவுசெய்து தங்களுடைய நகைகளை மீட்டுத் தருமாறும், ஜோலார்பேட்டை நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Related Link
தேவையில்லாத சல்லித்தனம் வேண்டாம்..

தேவையில்லாத சல்லித்தனம் வேண்டாம்..


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
9 hrs 49 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved