news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சீர்காழி அருகே ஆற்றின் குறுக்கே சேதமடைந்த மூங்கில் பாலம்
tv

Also Watch

tv

Read this

சீர்காழி அருகே ஆற்றின் குறுக்கே சேதமடைந்த மூங்கில் பாலம்

மாத்தாம்பட்டினம், மயிலாடுதுறை

27

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MYD Bridge

ஆற்றின் குறுக்கே சேதமடைந்த மூங்கில் பாலம் :

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தென்னாம்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட மாத்தாம்பட்டினம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

தென்னாம்பட்டினம் கிராமத்திலிருந்து மாத்தாம்பட்டினம் கிராமத்திற்கு சென்று வர பிரதான சாலை அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் 40 க்கும் மேற்பட்டோர் அருகே உள்ள கோணயாம்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்கள் பிரதான சாலை வழியாக கோணயாம்பட்டினம் பள்ளிக்கு செல்ல 5 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டும். எனவே தங்கள் கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள வடிகால் ஆறான முல்லை ஆற்றில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றின் குறுக்கே மூங்கில் பாலம் அமைத்து மறுபுறம் உள்ள கோணயாம்பட்டினம் கிராமத்திற்கு எளிதில் சென்று வருகின்றனர்.

பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள தற்காலிக மூங்கில் பாலத்தை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக சீரமைப்பு பணி செய்து பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த மூன்று
மாதங்களுக்கு முன்பு மூங்கில் பாலம் பழுதடைந்த நிலையில் மாணவ மாணவிகள் ஆபத்தான முறையில் கடந்து சென்ற வீடியோ சமுக வலைதளங்கள் மற்றும் தொலை காட்சிகளில்
செய்தியாக வெளிவந்த நிலையில்.

 ஊராட்சி நிர்வாகம் புதிய மூங்கில் பாலத்தை அமைத்து கொடுத்துள்ளது.இந்த தற்காலிக மூங்கில் பாலம் மழைகாலங்களில் மூழ்கிவிடுகிறது,பாலமும் பழுதாவதால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி மாத்தாம்பட்டினம் - கோணயாம்பட்டினம் இடையே முல்லையாற்றில் காங்கிரிட் நடைபாலம் அமைத்துதர வேண்டும் என பெற்றோர்கள் மற்றுற் பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
நெல் ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி விபத்து

நெல் ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி விபத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
2 hrs 35 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved