news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நெல் ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி விபத்து
tv

Also Watch

நெல் ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி விபத்து

நெருஞ்சி காலனி, நெல்லை

63

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNL Tractor accident

அரசு பேருந்து மோதி விபத்து :

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. விவசாயி. இவர் தனது தோட்டத்தில் அறுவடை செய்த நெல் மணிகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு நாகர்கோவில்
பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு சென்றார்.

அப்போது பணகுடி நான்கு வழி சாலையில் நெருஞ்சி காலனி பகுதியில் வரும்போது டிராக்டர் பழுதாகி சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது நெல்லையிலிருந்து நாகர்கோயில் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக டிராக்டரின் பின் பகுதியில் மோதியது.

இதில் டிராக்டரில் இருந்த நெல்மணிகள் நான்கு வழிச்சாலையிலும் பேருந்து உள்பகுதியிலும் கொட்டியது. இதில் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியோடு நெல்மணிகளை சாக்கு மூட்டைகளில் அள்ளி வைக்கின்றனர்.

மேலும் அரசு பேருந்து மோதி நெல் ஏற்றி வந்த டிராக்டர் விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பம் குறித்து பணகுடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link

"ஓபிஎஸ்-ன் விசுவாசத்தை பார்த்து திமுகவினரே அஞ்சுகின்றனர்"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved