மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் பகுதியில் OPS அணியினர் அதிமுகவில் இணையும் விழா எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: Ops அதிமுக தொண்டனாக இருந்த போது எத்தனை பதவிகள் கொடுத்துள்ளோம். கிளை கழக செயலாளர், நகர செயலாளர், அம்மாவுக்கு ஏற்பட்ட பிரச்சனையால் முதலமைச்சர், பிறகு எதிர்கட்சி துணை தலைவர், எதிர்கட்சி தலைவர், அம்மா இறப்புக்கு பிறகு முதலமைச்சர் பிறகு கழக ஒருங்கிணைப்பாளர், பின்னர் ஹவுசிங் போர்டு அமைச்சர், எத்தனை பதவிகள். பெரியகுளத்திலே ரோசி டீ கடை நடத்தியவருக்கு நாட்டையே ஆளக்கூடிய தகுதி இருக்கு என்பதற்கு அதிமுக சார்பில் அடையாளம் கொடுத்தது அம்மா இப்படி பதவி கொடுத்த அதிமுகவை அழிக்க தற்போது திமுகவில் சேர்ந்து தாய் கழகத்தை அழிக்க நினைக்கிறார் OPS காலாவதியான நிர்வாகிகளை கரையேற்றுவேன் என கூறும் திமுக முதல்வரிடம் கட்சியில் சேர்கின்றனர். ஒரு கட்சியில் A பார்ம், B பார்ம் என கையெழுத்து போட்ட OPS அதிமுகவில் சம்பாதித்த பணத்தை அதிமுகவை அழிக்க பயன்படுத்த உள்ளது வேதனையான ஒன்றது. விசுவாசம் என்ற பெயரில் பல பதவிகளை அதிமுகவில் OPS பெற்றார். இனிமேல் திமுகவில் வாங்கும் பதவிகள் அனைத்தும் துரோகத்தால் வாங்கும் பரிசாக தான் இருக்கும் விசுவாசத்துக்கு இருக்காது. திமுக மேடையில் OPS பேசியதில் உயிருள்ளவரை திமுக முதல்வர் ஸ்டாலினுக்கு விசுவாசமாக இருப்பேன் என்றார் இப்படி தான் அதிமுகவிலும் சொன்னார். அதிமுகவில் OPS கும்பிடு போட்டு அதிமுகவை ஏமாற்றினார், அதே போல் திமுகவையும் ஏமாற்றுவார், என கட்சியினரே கலக்கத்தில் உள்ளனர். திமுகவில் உள்ளவர்கள் பலர் அதிமுகவிலிருந்து சென்றவர்கள் தான் OPS வருகை திமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கியுள்ளனர் அந்த 28 தொகுதியிலுள் திமுகவினரே காங்கிரசை தோற்கடிப்பார்கள் அப்பகுதியில் அதிமுகவினர் கொடுத்து வைத்தவர்கள் எளிதில் வென்று விடுவார்கள் 5 ஆண்டு காலம் எதிர்கட்சியாக இருக்க முடியாதா பதவி பதவி என அப்பாவும், மகனும் அங்கும் இங்கும் ஒடி சென்று திமுகவில் சேர்ந்துள்ளனர் என பேசினார். Related Link பேம்பர்ஸ் தயாரிக்கும் தனியார் பஞ்சு குடோனில் தீ விபத்து