Also Watch
Read this
By: Manigandan Raja

தனியார் பஞ்சு குடோனில் தீ விபத்து :
தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ளது ஏவிஎம் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் ஆலை உள்ளது.
இந்த ஆலை வளாகப் பகுதியில் ஒரு பகுதியில் முதியவர்களுக்கு பயன்படுத்தக்கூடிய பேம்பர்ஸ் தயாரிப்பதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட 100 டன் எடையுள்ள பஞ்சுகள், மற்றும் ஃபேமஸ் தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய மூலப் பொருட்கள் குடோனின் தேக்கி வைக்கப்பட்டு இருந்தன.
இந்த பஞ்சில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மள மளவென வேகமாக பரவி எறிய துவங்கியது இதன் காரணமாக அந்த ஆலை வளாகப் பகுதி மற்றும் தீ மேலே உயர பரவியதால்
அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது .
இதைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் மேலும் அருகே உள்ள என்னை ஆலைக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான இலவம் பஞ்சு முற்றிலுமாக எரிந்து சேதமானது இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத் துறையினர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின் தீ விபத்து ஏற்பட்ட குடோனில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved