Also Watch
Read this
By: Manigandan Raja

உண்டியல் காணிக்கை அறிவிப்பு :
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், இன்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோடை விடுமுறை மற்றும் விஷேட நாட்களை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த நிலையில், உண்டியல்கள் நிரம்பி காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.
கோயில் இணை ஆணையர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பணியில், முதல் நாள் முடிவில் மலைக்கோயில் உண்டியல்கள் மூலம் 4 கோடியே 62 லட்சத்து 27 ஆயிரத்து 739 ரூபாய் ரொக்கம் வருவாயாகக் கிடைத்துள்ளது.
ரொக்கப் பணம் தவிர, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாகச் செலுத்திய 748 கிராம் தங்கம் மற்றும் 12,893 கிராம் (சுமார் 12 கிலோ) வெள்ளி ஆகியவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர். மேலும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 1448 கரன்சி நோட்டுகளும் உண்டியலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வங்கி அலுவலர்கள் என ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். உண்டியல்கள் இன்னும் அதிகமாக இருப்பதால், இந்தப் பணி நாளைய தினத்திலும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.