Also Watch
Read this
By: Manigandan Raja

திருத்தேர் வடம் பிடித்து வழிபாடு :
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற செஞ்சிக் கோட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெற்று வருவது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டு கமலக்கண்ணி அம்மன் ஆலய திருவிழா கடந்த ஏப்ரல் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனிடையே ஒன்பதாம் நாளான இன்று தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முன்னதாக செஞ்சிக் கோட்டையில் அமைந்துள்ள கமலக்கண்ணி அம்மன் ஆலயத்தில் இன்று காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சூலம் பம்பை மேளம் முழங்க கொண்டு வந்தனர். அப்பொழுது அக்கா தங்கையான கமலக்கண்ணி அம்மன் மற்றும் மாரியம்மன் பூங்கரகம் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள்
பக்திப் பரவசத்தில் கோவிந்தா.. கோவிந்தா.. என கோஷமிட்டு அம்மனை வழிபட்டனர்.
இந்த ஆண்டு நடைபெறும் தேர்த் திருவிழாவில் இன்று மாலை தொடங்கியது. இதில் செஞ்சி மட்டுமில்லாது சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பக்தர்களின் பாதுகாப்புக்காக செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ்ராஜ் தலைமையிலான 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செஞ்சி நகரில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டு உள்ளது.