Also Watch
Read this
By: Manigandan Raja

சிவகாசி அருகே அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் அய்யனார் என்பவருக்கு சொந்தமான APR பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிப்பின் போது வெளியான ரசாயனம் உள்ளிட்ட கழிவுகளை தீயிட்டு எரித்தபோது எதிர்பாராத விதமாக பட்டாசு கழிவுகள் பயங்கரமாக வெடித்து சிதறியுள்ளது.
இதில் கழிவுகளை தீயிட்டு எரிக்கும் பணியில் ஈடுபட்ட அச்சம்தவிழ்த்தானை சேர்ந்த கருப்பசாமி (வயது 55), என்ற பட்டாசு தொழிலாளிக்கு உடல் முழுவதும் தீப்பற்றி பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையின் தீக்காய சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 100 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மல்லி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved