Also Watch
Read this
By: Manigandan Raja

திருப்பூர் மாநகரப் பகுதிகளில் காவல்துறையினர் வாகனங்களில் செல்லாமல், நடந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடும் புட் பேட்ரோல் முறையில் இன்று கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்,
குறிப்பாக திருப்பூர் தெற்கு பகுதிக்கு உட்பட்ட கோம்பை தோட்டம், சிடிசி கார்னர், காங்கேயம் கிராஸ் ரோடு, பெரிய பள்ளிவாசல் வீதி, ஜம்ஜம் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாநகர காவல் துணை ஆணையர் தீபா சத்யன் IPS, காவல் உதவி ஆணையர் ஜான் , திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளர் கணேஷ் குமார் உட்பட 15 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சந்தைகள், பேருந்து நிலையங்கள், கோவில் பகுதிகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வது இதன் நோக்கமாகும், பொதுமக்களிடம் நேரடியாக சென்று சந்தேகத்திற்கு இடமான நபர்கள் இங்கு உள்ளனரா என கேட்டும், குற்றச் செயல்களை தடுப்பது போன்ற கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இத்தகைய நடை ரோந்து முறையானது தினம் ஒரு பகுதி என்கிற அடிப்படையில் நடைபெற உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved