news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சீர்காழியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என புகார்
tv

Also Watch

tv

Read this

சீர்காழியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என புகார்

சீர்காழி, மயிலாடுதுறை

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மின்வெட்டு

சீர்காழி, ஜூன் 5: சீர்காழி கோவிந்தராஜன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மின்பட்டு ஏற்பட்டதால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை இரவு தீப்பந்தத்தை ஏற்றி வைத்து இரவு பொழுதை கழித்தனர்.

சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், எடமணல், திருமுல்லைவாசல், கொண்டல், வள்ளுவக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகளால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் இதே போல் விவசாயிகள் போதிய மின்சாரம் கிடைக்காததால் விவசாயி பணிகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட கோவிந்தராஜர் நகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டுகளால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதை போல் நேற்று மாலை 5 மணி அளவில் எவ்வித முன் அறிவிப்பு இன்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இரவு 8.30 வரை மின்சாரம் வழங்கப்படவில்லை இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று கையில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் மின்சாரத் துறை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கையில் இருந்த தீபந்தங்களை தெருவில் உள்ள மின் கம்பத்தில் கட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், சீர்காழி கோவிந்தராஜன் நகரில் கடந்த சில வாரங்களாக தினமும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தால் கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

மின்சாரம் இல்லாததால் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து சாலையில் பொழுதைக் கழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு வருகின்றன. குடியிருப்பு அருகில் சீர்காழி நகராட்சி குப்பை கிடங்கு இருப்பதால் பாம்பு, பல்லி, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது.

இதனால் அச்சத்தோடு வாழ வேண்டிய நிலை இருந்து வருகிறோம். எனவே சம்மந்தப்பட்ட துறையினர் கோவிந்தராஜ் நகர் பகுதிக்கு முழுமையான மின்சாரம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Link
மின்மாற்றியில் பழுதுபார்த்தபோது விபத்து

மின்மாற்றியில் பழுதுபார்த்தபோது விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக - அதிமுக கூட்டணி கட்டுக்கதை, இபிஎஸ் முதல்முறை விளக்கம்

2
25 mins agoshare
தவெக மீது பாய்ச்சல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau