Also Watch
Read this

மக்களவையில், ‘பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா 2026’ மீதான விவாதத்தின் போது, மத்திய அரசின் கல்விச் சீர்திருத்த குழுவில் இடம் பெற்றுள்ள சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, "கோமிய நிபுணர்" என மறைமுகமாக விமர்சித்தார்.

மக்களவையில் பிரியங்கா காந்தி பேச்சு
தேர்வு முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, பொதுத் தேர்வுகளைப் பாதுகாப்பாக நடத்த பிரதமர் மோடி, உயர்மட்டக் குழுவை அமைத்தார். இந்தக் குழுவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடியும், ஒரு உறுப்பினராக இடம் பெற்று உள்ளார்.
இந்த நிலையில், மக்களவையில், காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி பேசியதாவது;
மத்திய அரசு அமைத்துள்ள புதிய கல்வி சீர்திருத்தக் குழுவில் ஒரு முன்னாள் உளவுத்துறை தலைவர், ஒரு ஐடி நிறுவன உரிமையாளர் மற்றும் ஒரு கோமிய நிபுணர் மட்டுமே உள்ளனர். இதில் உண்மையான தேர்வு சீர்திருத்த நிபுணர்கள் எங்கே?"
இவ்வாறு பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.

அனுராக்தாகூர் பதிலடி...
இதற்கு பதிலடி தரும் விதமாக, அனுராக் தாகூர் பேசியதாவது;
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் காமகோடியை, பிரியங்கா காந்தி அவமதித்துவிட்டார். காமகோடியின் கல்வித் தகுதியும், நாட்டின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பும் ஒட்டுமொத்த காந்தி குடும்பத்தின் கல்வித் தகுதியை விடவும் அதிகம்.

கோமியம் குடிக்கலாம்...
பிரியங்கா காந்தியும் அவரது சகோதரர் ராகுல் காந்தியும் ஒரே பாதையில்தான் பயணிக்கிறார்கள். இவர்களது மூளை சரியாக வேலை செய்வதற்கு ஏதோ குறைபாடு உள்ளது போல தெரிகிறது. இதற்குப் பதிலாக அவர்கள் கோமியத்தை குடிக்கலாம், அது அவர்களைக் குணப்படுத்தும்.
இவ்வாறு அனுராக் தாக்கூர் கூறி உள்ளார்.

என்ன கூறினார் காமகோடி?
பேராசிரியர் காமகோடி, கடந்த 2025ல் சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில், பசுவின் சிறுநீரான கோமியத்தில், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு போன்ற மருத்துவக் குணங்கள் இருப்பதாக அறிவியல் பூர்வமான ஆய்வுக் கட்டுரைகளை மேற்கோள் காட்டிப் பேசியிருந்தார். இதனை மனதில் வைத்தே பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்தில் இவ்வாறு விமர்சித்தார்.