news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news எட்டு ஆண்டுகளாக சம்பளமே வாங்கவில்லை, ஆச்சரியம்
tv

Also Watch

tv

Read this

எட்டு ஆண்டுகளாக சம்பளமே வாங்கவில்லை, ஆச்சரியம்

சீன நிறுவனரின் வெற்றிக்கதை

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சீனாவின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான CXMT நிறுவனர் ஜூ யிமிங் எட்டு ஆண்டுகளாக சம்பளமே வாங்கவில்லையாம்.

உலகத்தை திரும்பி பார்க்க வைத்தவர்
சாம்சங், மைக்ரான் உள்ளிட்ட உலகளாவிய சிப் தயாரிப்பு நிறுவனங்களுக்கு போட்டியாக, ஒரு நிறுவனத்தை கட்டமைக்க நினைத்து, இன்று உலகத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் தான், ChangXin Memory Technologies நிறுவனர் ஜூ யிமிங் (Zhu Yiming). இவர், தனது நிறுவனத்தைத் தொடங்கிய போது, அது மிகப்பெரிய இழப்பீடுகளையும் சவால்களையும் சந்தித்தது. சிப் தயாரிப்பு துறைக்கு கோடிக்கணக்கில் முதலீடும், பல வருட உழைப்பும் தேவைப்பட்டது. இதனால், நிறுவனம் லாபம் அடையும் வரை, தான் எந்தவொரு சம்பளமோ, போனஸோ வாங்கப் போவதில்லை என்று ஜூ யிமிங் சபதம் எடுத்தார்.

சுமார் எட்டு ஆண்டுகளாக...
இதன்படி, சுமாராக 8 ஆண்டுகளைத் தாண்டி, சம்பளம் ஏதும் பெறாமல் அவர் உழைத்தார். இன்று, மல்டி-பில்லியனர் நிறுவனத்தின் ஐபிஓ IPO - பங்குச்சந்தை அறிமுகம் மற்றும் வெளியீட்டிற்குப் பிறகு, நிறுவனத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. இதன் மூலம் ஜூ யிமிங்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் கிட்டத்தட்ட 300% உயர்ந்தது. அதாவது, சுமாராக இந்திய மதிப்பில் ₹1.16 லட்சம் கோடி முதல் ₹1.33 லட்சம் கோடி வரை அதிகரித்துள்ளது.

உலக பணக்காரர்கள் வரிசையில்...
இதன் மூலம் அவர் உலகப் பணக்காரர்கள் வரிசையில் இணைந்துள்ளார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, தனது சொத்தில் 40% பங்கை தனது நிறுவன ஊழியர்களுக்குப் போனசாக வழங்கப் போவதாக Zhu Yiming அறிவித்துள்ளார்.

இவரது நிறுவனம் பற்றி...
உலகளவில் கணினி, ஸ்மார்ட்போன்களுக்குத் தேவைப்படும் DRAM தயாரிப்பில் CXMT உலகின் 4ஆவது பெரிய நிறுவனமாகவும், சீனாவின் மிகப்பெரிய நிறுவனமாகவும் உயர்ந்துள்ளது. அமெரிக்கா, சீனாவிற்கு இடையே தொழில் நுட்ப போர் நடந்து வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் சீன சந்தைக்காக தயாரிக்கும் ஐபோன் மற்றும் பிற சாதனங்களில் இந்த CXMT நிறுவனத்தின் மெமரி சிப்களைப் பயன்படுத்துவது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

அன்றும் இன்றும்
ஒரு காலத்தில் நஷ்டத்தில் இயங்கி, ஊதியம் கூட இல்லாமல் உழைத்த ஒருவர், இன்று உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தன்னிடம் வர்த்தகம் செய்யக் காத்திருக்கும் அளவிற்கு ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி விட்டார்.
பாராட்டுவோம்...

Related Link
பொன்விழா கொண்டாட்டத்தில் சம்பள உயர்வு கோஷம்

பொன்விழா கொண்டாட்டத்தில் சம்பள உயர்வு கோஷம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இணைய தளங்களுக்கு எதிராக நோட்டீஸ், வழக்குப்பதிவு

2
18 mins agoshare
இணைய தளங்களுக்கு எதிராக நோட்டீஸ், வழக்குப்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau