news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வெற்றிகரமாக புவிக்கு திரும்பிய ’ஸ்டார்ஷிப்’ விண்கலம்
tv

Also Watch

tv

Read this

வெற்றிகரமாக புவிக்கு திரும்பிய ’ஸ்டார்ஷிப்’ விண்கலம்

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் சாதனை

1

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் SpaceX நிறுவனம் விண்வெளி வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனையை அரங்கேற்றி உள்ளது.

Starship Flight 13
கடந்த ஜூலை 25ஆம் தேதியன்று ஏவப்பட்ட 'ஸ்டார்ஷிப் 13' விண்கலம் விண்வெளிக்குச் சென்றுவிட்டு மீண்டும் புவி மண்டலத்திற்குள் நுழைந்து, இந்தியப் பெருங்கடலில், எவ்வித சேதமும் இன்றி பாதுகாப்பாக தண்ணீரில் மிதந்தது.

விண்வெளி வரலாற்றில் முதல்முறை
இதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு சோதனைகளின் போது, விண்கலம் கடலில் இறங்கும் போதோ, வளி மண்டலத்திற்குள் வரும் போதோ வெடித்துச் சிதறிவிடும். ஆனால், இந்த முறை 400 அடி உயரமுள்ள மாபெரும் விண்கலம், மிகவும் மெதுவாகவும் துல்லியமாகவும் கடலில் இறங்கியது. கடலில் விழுந்த பிறகும் அது வெடிக்காமல், ஒரு பிரம்மாண்ட படகு போல தண்ணீரில் மிதக்கத் தொடங்கியது.
விண்கலம் கடலில் விழுந்த பின்னரும், அதன் ஆன்-போர்டு கேமராக்கள் மற்றும் சென்சார்கள் சேதம் அடையாமல் தொடர்ந்து வேலை செய்தன.

நேரடி வீடியோ காட்சி
விண்கலம் கடலில் மிதப்பதை தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் நெட்வொர்க் மூலம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு நேரடி வீடியோ காட்சிகளாக அனுப்பியது. இது விண்வெளி ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், எலான் மஸ்க், "நாங்கள் ஸ்டார்ஷிப்பை மீட்டெடுக்க ஒரு கப்பலை அனுப்பி உள்ளோம்," என்று தனது ட்விட்டர் தளத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு வடமேற்கே உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் மிதந்து கொண்டிருக்கும் அந்த விண்கலத்தை நோக்கி மீட்புக் குழுவினர் கப்பலில் விரைந்துள்ளனர்.

அடுத்த இலக்கு...
அடுத்து வரவிருக்கும் செவ்வாய் மற்றும் நிலவுப் பயணங்களுக்கான ராக்கெட்டுகளை மிகக் குறைந்த செலவில் உருவாக்க ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Link
எட்டு ஆண்டுகளாக சம்பளமே வாங்கவில்லை, ஆச்சரியம்

எட்டு ஆண்டுகளாக சம்பளமே வாங்கவில்லை, ஆச்சரியம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கம்யூனிஸ்டுகளுடன் திமுக கைகோர்க்கும் என உதயநிதி உறுதி

0
16 mins agoshare
நல்லகண்ணு சிலை திறப்பு விழாbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau