Also Watch
Read this

பிரதமர் மோடி, பாதுகாப்புப் படை குறித்து அவதூறான பதிவுகளை வெளியிட்ட சமூக ஊடகக் கணக்குகளுக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பதிவுகளில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திய நபர்கள் குறித்த தகவல்களைக் கோரி, எக்ஸ் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

டில்லியில் போராட்டம்
டெல்லியில் நடந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மாணவர் போராட்டங்களின் போது, பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்ட கணக்குகள் மீது டெல்லி போலீஸ் எப்.ஐ.ஆர் பதிவு செய்து உள்ளது. இதுகுறித்து, 'எக்ஸ்' தளத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அவமதிக்கும் வகையில்...

விவரங்கள் சேகரிப்பு
சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவிட்ட நபர்களின் முழுப் பெயர், முகவரி, தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் அவர்கள் கணக்கில் லாக்-இன், லாக்-அவுட் செய்த நேர விவரங்களை வழங்குமாறு டெல்லி போலீஸ் 'எக்ஸ்' நிறுவனத்திடம் கோரியுள்ளது. இந்த வழக்கின் எதிர்கால விசாரணைக்காக, சம்பந்தப்பட்ட பதிவுகள் மற்றும் வீடியோக்கள் தொடர்பான அனைத்துத் தரவுகளையும் அழியாமல் பாதுகாத்து வைக்குமாறும் போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved