Also Watch
Read this
தமிழ்நாட்டின் உரிமைக்காக பொதுவுடைமை இயக்கத்துடன் திமுக என்றும் கைகோர்த்து போராடும் என்று, வீரபாண்டியன் முன்னிலையில் தோழர் நல்லகண்ணு சிலையை திறந்து வைத்தபின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உறுதி கூறி உள்ளார்.

தோழர் நல்லகண்ணு சிலை திறப்பு
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில், ‘உதவும் கைகள்’ அறக்கட்டளை மற்றும் திணை நிலவாசிகள் ஒருங்கிணைத்த தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு சிலை திறப்பு விழா மற்றும் ‘அம்மாச்சி கற்பனையின் முதல் ஆசிரியர்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நல்லகண்ணு திரு உருவச்சிலையைத் திறந்துவைத்து நூலையும் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது;
தோழர் நல்லகண்ணுக்கு முதன்முதலாக எழுப்பப்பட்ட சிலையை உங்களுடன் சேர்ந்து திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

“போராடினால் எதுவும் கிடைக்கும்”
இன்றைக்கு மக்களுக்கான களப் போராளிகளை கொண்டாடுவதைவிட இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுக்கும் போராளிகளை தான் சமூதாயம் அதிகமாகக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது. “போராடினால் எதுவும் கிடைக்கும்” என்று உறுதியாக நம்பியவர் நல்லகண்ணு. அதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம், டெல்லியில் நடந்த போராட்டம். டெல்லியில் நடந்த போராட்டத்தையொட்டி, இந்தியா முழுவதும் இளைஞர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால், நீட் எதிர்ப்புப் போராட்டம் என்பது, தமிழ்நாட்டுக்குப் புதிது கிடையாது. என்றைக்கு நீட் முதன்முதலாக வந்ததோ, அன்றிலிருந்து திமுக எதிர்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
நானும் வீரபாண்டியனும்...

ஓரணியில் கைகோர்த்து...
தமிழ், தமிழர், தமிழ்நாட்டு உரிமைக்கு எதிராக என்ன நடந்தாலும், திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் என்றைக்கும் ஓரணியில் கைகோர்த்துக் களத்தில் நிற்கும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved