Also Watch
Read this
நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்வி மற்றும் தேர்வுத் துறையில், தற்போது ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் வரவுள்ளது.

சிறப்பு உயர்நிலைக்குழு
மாணவர்களின் எதிர்காலத்தோடும், லட்சக்கணக்கான பெற்றோரின் கனவுகளோடும் தொடர்புடைய நமது நாட்டின் தேர்வு முறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் மோடி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். இந்தியாவின் தேர்வு முறையை முற்றிலும் மறுசீரமைக்கவும், அதில் உள்ள குறைபாடுகளைக் களைந்து நவீனப்படுத்தவும் ஒரு சிறப்பு உயர்நிலைக் குழுவை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நந்தன் நிலேகனி தலைமையில்...
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பணிக்காக, இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் இணை நிறுவனரும், ஆதார் திட்டத்தின் முக்கிய சிற்பியுமான நந்தன் நிலேகனி தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். தொழில் நுட்பத்திலும் நிர்வாகத்திலும் உலகளவில் முத்திரை பதித்த நந்தன் நிலேகனியின் வழிகாட்டுதலில் இந்த சிறப்பு டாஸ்க் ஃபோர்ஸ் செயல்படப் போகிகிறது. சமீபகாலமாக, தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை, தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் நம்பகத்தன்மை குறித்த பல்வேறு கோரிக்கைகளும் விவாதங்களும் எழுந்து வந்த நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்று உள்ளது.

வரவேற்பும் நம்பிக்கையும்
நந்தன் நிலேகனி தலைமையிலான இந்த உயர்நிலைக் குழு, தற்போதைய தேர்வு முறையில் உள்ள சிக்கல் மற்றும் சவால்களை விரிவாக ஆய்வு செய்யும். அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி, தேர்வுகளை மிகவும் பாதுகாப்பாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும். மாணவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைத்து, நியாயமான முறையில் அவர்களின் திறமையை மதிப்பிடும் வகையில் புதிய சீர்திருத்தங்களை இந்தக் குழு பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு, நாட்டின் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved