news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சூர்யகுமார் யாதவின் டி-20 கேப்டன் பதவி பறிப்பு?
tv

Also Watch

tv

Read this

சூர்யகுமார் யாதவின் டி-20 கேப்டன் பதவி பறிப்பு?

சூர்யகுமார்

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சூர்யகுமார்

தேர்வுக் குழு, பிசிசிஐ-க்கு முகமது கைஃப் கண்டனம் :

ஐசிசி டி-20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த சூர்யகுமார் யாதவிடம் இருந்து கேப்டன் பதவியை பறிக்கும் பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவின் முடிவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு வீரர் தன்னை நிரூபித்த பின்னரும் இதுபோன்ற நிகழ்வு எதிர்பாராத ஒன்று என அவர் கருத்து தெரிவித்தார்.

ரோகித் சர்மா விளையாடுவதில் சிக்கல் என தகவல் :

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா பங்கேற்பதில் குழப்பம் நீடிக்கிறது.

நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது தொடைப் பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், முழு உடற் தகுதியுடன் இருப்பதை வரும் 8-ம் தேதி அவர் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகும் ஸ்ரேயாஸ் ஐயர்?

 ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மீது கடும் அதிருப்தியில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, 2027 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரை டிரேடிங் முறையில் மாற்றிக் கொள்ள முயற்சித்து வருகிறது.

ஐசிசி டி-20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் :

லார்ட்ஸில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற இங்கிலாந்து அணி 254 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த தொடரின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 140 ரன்களும்,நியூசிலாந்து அணி 113 ரன்களும் எடுத்த நிலையில்.

இரண்டாம் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 226 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்துள்ளது.

2-ஆவது முறையாக இறுதிப்போட்டியில் ஸ்வரேவ் :

ஜெர்மனி டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 2-ஆவது முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இதன் மூலம் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நீண்டகாலமாக எதிர்பார்த்த தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் தருவாயை எட்டியுள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் ஜேக்கப் மென்சிக்கை நான்கு செட்களில் வீழ்த்தி அலெக்சாண்டர் ஸ்வெரெவ் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

Related Link
இந்தியா டி20 அணியில் சூர்யவன்ஷி, ரசிகர்கள் வரவேற்பு

இந்தியா டி20 அணியில் சூர்யவன்ஷி, ரசிகர்கள் வரவேற்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போராட்டம் வாபஸ் என சி.ஜே.பி. அறிவிப்பு

9
12 hrs 56 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau