news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தர்மேந்திர பிரதான் ராஜினாமா, ஜந்தர்மந்தரில் கொண்டாட்டம்
tv

Also Watch

tv

Read this

தர்மேந்திர பிரதான் ராஜினாமா, ஜந்தர்மந்தரில் கொண்டாட்டம்

பாஜக அரசின் முதல் ராஜினாமா

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நீட் வினாத்தாள் முறைகேடு விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் மாணவர்கள் மாபெரும் போராட்டம் நடத்தி வந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடு
நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, முறைகேடு, மறுதேர்வு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று, மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் போராட்டம் மேலும் வலுவடைந்து வருகிறது. போராட்டக் களத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இரு தரப்பிலும் காயங்களும் ஏற்பட்டன.

தொடர் உண்ணாவிரதம்
இந்த விவகாரத்தில், 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்துவந்த சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், நேற்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்தார். மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா அவரைச் சந்தித்து மத்திய அரசு எடுக்க இருக்கும் நடவடிக்கை குறித்து தெரிவித்து, இந்தப் போராட்டத்தை சோனம் வான்சுக் முடித்ததாக தெரிகிறது.

மாணவர்களுடன் பேச்சு
இதேபோல், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகளை ஜே.பி.நட்டா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நீட் வினா தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது எந்த வழக்கும் பதிய கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். இன்று மாலை வரை அதற்கான அவகாசத்தையும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகள் அளித்து இருந்தனர்.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு பொது போராட்டத்திற்கு, மத்திய அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளது இதுவே முதல்முறை. இந்த நிலையில், ஜந்தர்மந்தரில் மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Link
இளைஞர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி, நெகிழ்ச்சி

இளைஞர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி, நெகிழ்ச்சி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வசூலில் மரண மாஸ் காட்டிய 'ஜனநாயகன்'

3
43 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau