Also Watch
Read this

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி ஹராரே மைதானத்தில் இன்று ஜூலை 25ஆம் தேதி நடைபெறுகிறது.
தொடரை கைப்பற்றுமா இந்தியா?
ஏற்கெனவே நடைபெற்ற முதல் போட்டியில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், 2ஆவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றுமா என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. எனினும், முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன்செய்யும் ஆர்வத்தில் சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி இருக்கிறது.

வரலாற்று சாதனை படைத்த இந்திய கேப்டன் ஸ்ரேயஸ்
தொடர் தோல்விகளில் இருந்து இந்திய அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள நிலையில், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷ்ரேயஸ், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் தொடர்ச்சியாக டாஸை வென்றார்.

அதேபோல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் டாஸ் வென்றதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 8 போட்டிகளில் டாஸ் வென்ற உலகின் முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் இந்திய தரப்பில் 7 முறை டாஸ் வென்று தோனி 2ஆவது இடத்திலும், 6 முறை டாஸ் வென்று கோலி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

முதலமைச்சர் விஜய் குறித்து வருண் சக்கரவர்த்தி
காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் இருந்தே முதலமைச்சர் விஜய்யின் ரசிகராகி விட்டதாக இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஜனநாயகன் என்னவொரு பிரியாவிடை திரைப்படம் என புகழ்ந்து உள்ளதோடு, அந்த படத்தின் ஒவ்வொரு பகுதியையும் மிகவும் ரசித்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், தனது சிறுவயது பருவத்தின் ஒரு முக்கிய அங்கமாக விஜய் இருந்ததாகவும், அவரை மிகவும் மிஸ் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved