Also Watch
Read this
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக டி20 போட்டித் தொடரில் விளையாடும் இந்திய அணியில், ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன், திலக் வர்மா துணை கேப்டன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி, பிரின்ஸ் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு தரப்பட்டு உள்ளது.

30 வீரர்கள் அறிவிப்பு
ஆசிய விளையாட்டு போட்டிகள், வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை ஜப்பானில் உள்ள ஐச்சி நகோயா நகரில் நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்தியா பங்கேற்கிறது. டி20 ஃபார்மெட்டில் இந்த கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.இந்த தொடருக்கான உத்தேச இந்திய கிரிக்கெட் அணி விவரம் கடந்த மாதம் வெளியானது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த அந்தப் பட்டியலில் மொத்தம் 30 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அதில் வைபவ் சூர்யவன்ஷியும் இடம் பெற்றிருந்தார்.

ஆசிய விளையாட்டு போட்டி தொடருக்கான இந்திய அணியில் யார் யார்?
ஸ்ரேயஸ் ஐயர் - கேப்டன்
திலக் வர்மா - துணை கேப்டன்)
அபிஷேக் சர்மா
சஞ்சு சாம்சன்
இஷான் கிஷன்
ஷிவம் துபே
நிதிஷ் குமார் ரெட்டி
அக்சர் படேல்
வாஷிங்டன் சுந்தர்
வருண் சக்கரவர்த்தி
ரவி பிஷ்னோய்
ஹர்ஷித் ராணா
அர்ஷ்தீப் சிங்
பும்ரா
வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் 2026 அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்
இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டி 2026க்கான 15 வீரர்கள் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார். இதில்தான் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய சீனியர் அணியில் விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார். ஐபிஎல் 2026ஆம் ஆண்டுக்கான சீசனில் 16 இன்னிங்ஸில் 776 ரன்களை சேர்த்திருந்தார் வைபவ் சூர்யவன்ஷி. இதன்மூலம் இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் ஆனார். ஐபிஎல் சீசனில் மொத்தம் 72 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார்.