Also Watch
Read this
By: Manigandan Raja

"போதை காளான்" சாக்லேட் சாப்பிட்டதால் விபரீதம்
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் கோடைகால முகாமில் போதை காளான் கலந்த சாக்லேட்டை சாப்பிட்ட 13 குழந்தைகள் "ஜாம்பி" மனநிலைக்கு மாறிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஈஸ்ட் ஆரஞ்சு பகுதியில் உள்ள YMCA டே கேம்ப் என்ற கோடைகால முகாமில் ஒரு சிறுமி சாதாரண சாக்லேட் என்று நினைத்து போதை காளான் கலந்த சாக்லேட்டை மற்ற குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்.
அந்த சாக்லேட்டை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 13 குழந்தைகள் சுயநினைவை இழந்து திகைத்து நின்றனர். இதையடுத்து, அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பனிப்புயலில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் பனிப்புயலில் சிக்கி போஸ்னியா நாட்டை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். ஜார்ஜியா எல்லையில் உள்ள எல்பிரஸ் மலையில் போஸ்னியா நாட்டை சேர்ந்த 7 மலையேற்ற வீரர்கள் ஏறினர்.
5 ஆயிரத்து 350 அடி உயரத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென பனிப்புயல் வீசியதில் அவர்கள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று 2 மலையேற்ற வீரர்களை உயிருடன் மீட்டனர். உயிரிழந்த 5 பேரில் இருவரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்பாலின ஈர்ப்பாளர்கள் பேரணியில் காரை மோதி தாக்குதல்

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பேரணியில் காரை மோதி தாக்குதல் நடத்திய முக்கிய நபரை போலீஸார் சுட்டுக் கொலை செய்தனர். பிராண்டன்பர்க் கேட் அருகே உள்ள டியர்கார்டன் பூங்கா பகுதியில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பேரணி நடத்தினர்.
அப்போது, பேரணியில் மர்ம நபர் காரை மோதி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 16 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, தாக்குதல் நடத்திய அப்துல் பலவுட் என்பவரை நேற்று மாலை போலீஸார் சுட்டுக் கொன்றனர். இவர் ஜிஹாதி மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.