Also Watch
Read this
By: Manigandan Raja

மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்
டெல்லியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியதற்கு யார் பொறுப்பு? பயங்கர ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி அளித்தது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம்
மாநிலங்களவை மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள்
கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக
அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று நடக்கும் கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படுகிறது.
தேர்வு சீர்திருத்தங்களை மேற்கொள்ள உயர்மட்ட அதிகார குழு

தேர்வு சீர்திருத்தங்களை மேற்கொள்ள இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலகேனி தலைமையில் உயர்மட்ட அதிகார குழு அமைக்கப்பட்டதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மாணவர்கள் போராட்டத்தை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3-வது வீடியோ வெளியிட்டுள்ள அவர், வரவிருக்கும் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களை ஏமாற்றியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.