news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா
tv

Also Watch

tv

Read this

பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா

அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Parliment

மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் ஜிதேந்திரசிங்

தேர்வு முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வினாத்தாள் கசிவில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் மசோதா மக்களவையில் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சையான நிலையில், இது போன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு சட்டம், 2024-இல் திருத்தங்களை மேற்கொள்ள கடந்த வாரம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஒவ்வொரு மாநிலங்களிலும் விரைவு நீதிமன்றங்கள்

தேர்வு முறைகேடுகளை விரைவாக விசாரிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் விரைவு நீதிமன்றங்களாக அமர்வு நீதிமன்றங்களை அமைக்கும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் சட்ட அமலாக்கத்திலுள்ள ஓட்டைகளை அடைத்து, குற்றத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறையும் 10 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

டெல்லியில் மாணவர்களை போலீசார் தாக்கியதை எதிர்த்து மனு


டெல்லியில் பேரணி சென்ற மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக கூறி தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

கடந்த 20-ஆம் தேதி மத்திய கல்வியமைச்சராக இருந்த பிரதானை பதவி விலகக் கோரி பேரணியாக சென்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். கடும் கண்டனத்திற்கு ஆளான இந்த சம்பவம் குறித்து தலைமை நீதிபதி அமர்வு இன்று விசாரிக்கிறது.

Related Link
மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்

மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கம் விலை உயர்ந்தது

0
6 mins agoshare
Gold 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau