news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சரக்கு கப்பலில் இருந்த 4 இந்திய மாலுமிகளில் 2 பேர் மாயம்
tv

Also Watch

tv

Read this

சரக்கு கப்பலில் இருந்த 4 இந்திய மாலுமிகளில் 2 பேர் மாயம்

இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கப்பல் மீது தாக்குதல்

உக்ரைன் துறைமுகத்தில் மீண்டும் கப்பல் மீது தாக்குதல்

உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 இந்திய மாலுமிகள் மாயமாகினர். எம்வி ஏஜிஎன் ராக்னர் என்ற சரக்கு கப்பல் துறைமுகத்தில் நின்றிருந்த நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த கப்பலில் இருந்த 4 இந்தியர்களில் 2 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், மற்ற 2 பேரின் நிலை குறித்த விவரம் தெரியவில்லை. 2 பேரின் நிலை தொடர்பான தகவலுக்கு காத்திருப்பதாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கப்பல் மீதான தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்ப்படும் 

தங்களது கப்பல் மீதான தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுடன் தொடர்புடைய ராணுவ சரக்குகளை ஏற்றிச் சென்ற கப்பல்களை குறிவைத்து, காஸ்பியன் கடலில் உக்ரைன் தொலைதூரத் தாக்குதல் நடத்தியதாக அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.

இந்த தாக்குதலில் கப்பல் வெடித்ததில் ஒரு மாலுமி கொல்லப்பட்டதாகவும், மற்றொரு மாலுமி படுகாயமடைந்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இந்த சூழலில், கப்பல் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

Related Link
ரஷ்யா-வடகொரியாவின் கூட்டு நடவடிக்கை ஆசியாவுக்கு ஆபத்து

ரஷ்யா-வடகொரியாவின் கூட்டு நடவடிக்கை ஆசியாவுக்கு ஆபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் கடும் போட்டி

0
4 mins agoshare
Vinfast








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau