Also Watch
Read this
By: Manigandan Raja

தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து 4 தொழிலாளர்கள் பலி
அசாமில் இரும்பு வார்ப்பு தொழிற்சாலையில் சிலிண்ட் வெடித்த விபத்தில் 4 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். கச்சார் மாவட்டத்திலுள்ள ஐஆர்ஐடி இரும்பு வார்ப்பு தொழிற்சாலையின் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சாலை தடுப்பில் மோதி நொறுங்கிய தனியார் பேருந்து

கேரள மாநிலம் மலப்புரம் அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி நொறுங்கிய பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 11 பேர் காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர்.
பாகிஸ்தானுக்கு கற்பனைக்கு எட்டாத பதிலடி கொடுக்கப்படும்

பாகிஸ்தானின் எந்தவொரு தவறான நடவடிக்கைக்கும், கற்பனைக்கு எட்டாத வகையில் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். லடாக்கில் நடைபெற்ற 27-வது கார்கில் வெற்றி தின நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்த விவகாரத்தை தவிர, அந்த நாட்டுடன் வேறு எந்த பேச்சுவார்த்தையும் இருக்காது என்றார்.