Also Watch
Read this
By: Web Team

ராணிப்பேட்டை அருகே ஆடி மாதத்தை ஒட்டி, முத்துமாரி அம்மன் கோவிலில் பால்குடம், கூழ் வார்த்தல் மற்றும் பொங்கலிடும் திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி, அம்மனுக்கு காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் காலை 10 மணியளவில் முத்துக்கடை வேம்புலி அம்மன் கோவிலில் இருந்து முக்கிய சாலைகளின் வழியாக பால்குடம் எடுத்து வந்தனர்.
பின்னர், பால்குடங்களை பக்தர்கள் கருவறை முன்பாக நீண்ட வரிசையில் நின்று முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பாலபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved