news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திமுக எம்பி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை
tv

Also Watch

திமுக எம்பி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

திருவண்ணாமலை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
IT Raid

திருவண்ணாமலை அடுத்த வேங்கிகால் தென்றல் நகர் பகுதியில் உள்ள திமுகவைச் சேர்ந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி
அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரை வீட்டில் 15 க்கு மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினராக பதிவி வகித்து வரும் சி.என்.அண்ணாதுரை திமுக ஆட்சியில் குடும்ப உறுப்பினர் மூலம் APU CONSTRUCTION என்ற அரசு ஒப்பந்ததாரராக செயல்பட்டு வருவதாகவும்.

இதன் மூலம் பல கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ஒப்பந்தம் எடுத்து பல்வேறு பணிகளை செய்து வருவதால் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக கூறி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலை 8.30 மணி முதல் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக வேலூர் மற்றும் திருவண்ணாமலை
லஞ்ச ஒழிப்பு போலீசார் 15 க்கும் மேற்பட்டோர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் APU CONSTRUCTION என்ற பெயரில் 25க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் வீடு கட்டுவதற்காக கான்கிரீட் மெஷின் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒப்பந்தம் எடுத்து சாலை அமைத்தல் மற்றும் மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து செய்து வருவதால் தற்போது அதிக அளவில் பணம் சேர்த்து வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஏழு ஏழு மணிநேர சோதனை முடிவுக்கு வந்தது. இரண்டு ஜீப்புகளில் வேலூர் டிஎஸ்பி சங்கர் தலைமையில் 16 பேர் கொண்ட குழுவினர்
சோதனையில் ஈடுபட்டனர். எம்.பி.சி.என்.அண்ணாதுரை இல்லத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் அதிகாரிகள் மௌனமாக சென்றனர்.

Related Link
கேஆர்பி அணையில் இருந்து 600 கன அடி நீர் திறப்பு

கேஆர்பி அணையில் இருந்து 600 கன அடி நீர் திறப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு விதிக்கும் வரி அல்ல - நிதியமைச்சர் விளக்கம்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved