news-tamil-logo

3/22/2026, 12:41:12 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கணவரை பிரிந்து வாழ்ந்த அத்தை மகள்
tv

Also Watch

tv

Read this

கணவரை பிரிந்து வாழ்ந்த அத்தை மகள்

பூங்கா நகர், திருவள்ளூர்

Posted on: Feb 06, 2026 06:43 AM

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இரவு நேரத்தில் காரில் சென்றுகொண்டிருந்த இரண்டு பேர். காரை பாதி வழியில் வழிமறித்து இருவரையும் கத்தியால் குத்திய இளைஞர். ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி. செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்து கொலையாளியை கையும் களவுமாக பிடித்த போலீஸ். காரில் சென்றவரை கத்தியால் குத்தி கொலை செய்தது ஏன்? பின்னணி என்ன?

இந்துமதியின் முதல் கணவர் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம், புட்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரபாபு - இந்துமதி தம்பதிக்கு 8 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணமாகிருக்கு. இந்த தம்பதிக்கு ரெண்டு பெண் குழந்தைங்க இருக்காங்க. இதுல ராஜேந்திரபாபு கடந்த 2019ஆம் வருஷத்துல உடல் நலக்குறைவால உயிரிழந்துடட்ரு. அதுக்கடுத்து இந்துமதி தனது மகள்களோட தனியா வசிச்சுட்டு இருந்தாங்க.

அசோக்குமாரை காதலித்து திருமணம் செய்த இந்துமதி
மகள் தனியா இருக்குறத பாத்து நொந்துபோன பொற்றோர், அவங்களுக்கு 2வது கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்ணிருக்காங்க. அதுபடி பூங்கா நகரைச் சேந்த அசோக்குமார வரன் பாத்துருக்காங்க. ஆனா அவர பத்தி விசாரிக்கும் போது கிராம மக்கள் அசோக்குமாருக்கு நிறைய பெண்கள் கூட பழக்கம் இருக்கு, அவன் நல்லவன் கிடையாது, அதனால உங்க பொண்ண அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்காதிங்கன்னு சொல்லிருக்காங்க. இதனால அந்த வரன கைவிட்டுட்டாங்க இந்துமதியோட பெற்றோர். ஆனா அதுக்கப்புறம் அசோக்குமாரும் - இந்துமதியும் பேசி பழக ஆரம்பிச்சுருக்காங்க. அந்த பழக்கமே இவங்களுக்குள்ள காதலா மாறிருக்கு. இதனால இந்துமதி பெற்றோருக்கு தெரியாம அவர கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ ஆரம்பிச்சுட்டாங்க.

மனைவியை அடித்து சித்ரவதை செய்த கணவன் அசோக்குமார்
ஆரம்பத்துல இவங்களோட வாழ்க்கை நல்லபடியா போய்ட்டு இருந்துருக்கு. ஆனா, மதுபோதைக்கு அடிமையான அசோக்குமார் கடந்த 6 மாசமா சரியா வேலைக்கு போகாம மனைவிய போட்டு அடிச்சு சித்ரவதை பண்ணிருக்காரு. கொஞ்சம் நாளைக்கு முன்னாடி நள்ளிரவு நேரத்துல கணவன் யார்கிட்டயோ ஃபோன் பேசிட்டு இருந்ததா கூறப்படுது. இதபாத்து கடுப்பான மனைவி இந்த நேரத்துல யார் கூட பேசிட்டு இருக்கிங்க, நீங்க யார் கூடவோ தொடர்புல இருக்கிங்கன்னு சண்டை போட்ருக்காங்க. அதுக்கு கணவன் நான் யார் கூடவும் பேசுவேன், என்ன வேண்டும்னாலும் செய்வேன், அத கேட்க நீ யாரு, என்ன கேள்வி கேட்க உனக்கு எந்த ஒரு உரிமையும் கிடையாதுன்னு சொல்லிருக்காரு. அதுக்கு இந்துமதி எங்க வீட்ல உங்கள கல்யாணம் பண்ண வேணான்னு சொன்னாங்க, நான் தான் கேட்காம காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன், இப்ப என் வாழ்க்கைய கேள்விக்குறியாகிருச்சுன்னு அழுது சண்டை போட்டுட்டு தன்னோட தாய் வீட்டுக்கு போய்ட்டாங்க.

அசோக்குமார் - சந்திரபோஷ் இடையே கடும் வாக்குவாதம்
மனைவி, தன்னை விட்டு பிரிஞ்சு போனதால கொலை வெறியான அசோக்குமார், இந்துமதியோட வீட்டுக்கு போய்ட்டு அவங்கள அடிச்சு டார்ச்சர் பண்ணிட்டு இருந்துருக்காரு. இதனால கோபமான இந்துமதி தன்னோட அத்தை பையன் சந்திரபோஸ் கிட்ட நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. இதகேட்டு கொலை வெறியான சந்திரபோஸ் தன்னோட நண்பர் நித்தியானந்தத கூப்டுட்டு நேரா அசோக்குமாரோட வீட்டுக்கு போய்ருக்காரு. அப்ப, உன்னால இந்துமதியோட வாழ்க்கையே கேள்விக்குறியாகிருச்சு, உன்ன பிடிக்கலன்னு சொல்லி அவ அவங்க அம்மா வீட்ல போய் இருக்கா, ஆனா நீ மறுபடியும் எதுக்கு அவள டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கன்னு திட்டிருக்காங்க. அப்ப அசோக்குமார் ரெண்டு பேரையும் தகாத வார்த்தையால திட்ட, அந்த நேரத்துல இவங்களுக்குள்ள வாக்குவாதம் அதிகமாகிருக்கு. இதபாத்த அங்கருந்த மக்கள், ரெண்டு தரப்பையும் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி விட்ருக்காங்க.

அசோக்குமாரை கைது செய்து விசாரிக்கும் போலீஸ்
ஆனா, கொலை வெறியோட வீட்டுக்குள்ள போன அசோக்குமார், ரெண்டு பேரையும் கொலை பண்ண முடிவு பண்ணிருக்காரு சண்டைக்கு அப்புறம் சந்திரபோசும், நித்தியானந்தமும் கார்ல வீட்டுக்கு திரும்பிட்டு இருந்தாங்க. அப்ப கத்தியோட பைக்ல அவங்கள பின்தொடர்ந்து வந்த அசோக்குமார் பாதி வழியில கார வழிமறிச்சு சண்டை போட்ருக்காரு. அப்ப மறைச்சு வச்சுருந்த கத்திய எடுத்த அசோக்குமார், சந்திபோஷையும், நித்தியாநந்தத்தையும் சரமாரியா குத்திருக்காரு. இதுல நித்தியானந்தம் உயிரிழந்துட்டாரு. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் அசோக்குமாரோட செல்போன் நம்பர வச்சு அவர கைது பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.

Related Link

"எனக்கு சவக்குழி தோண்டும் காங்."

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
13 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved