திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செட்டியப்பனூரில் உள்ள பெருமாள் கோவிலில் ஐயப்ப பக்தர்களின் கன்னி பூஜை மற்றும் பஜனை பூஜை நடைபெற்றது. மாலை அணிந்து சபரிமலைக்கு யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பூஜையில் கலந்து கொண்ட நிலையில், சபரிமலை சன்னிதானம் போன்று வடிவமைத்திருந்தது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.