news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆழமான பகுதிக்கு சென்று குளிக்கும் போது விபரீதம்
tv

Also Watch

tv

Read this

ஆழமான பகுதிக்கு சென்று குளிக்கும் போது விபரீதம்

இரும்புலிச்சேரி, செங்கல்பட்டு

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இரும்புலிச்சேரி, செங்கல்பட்டு

பாலாற்றில் மூழ்கி இரு பெண்கள் உயிரிழந்த சம்பவம் :

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி மற்றும் நெரும்பூர் இரு ஆகிய கிராமத்திற்கிடையே பாலாறு செல்வதால் போக்குவரத்திற்காக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலாற்றங்கரையில் அப்பகுதி மக்கள் துணி துவைப்பதும் குளிப்பதும் வழக்கம் இந்நிலையில் இன்று இரும்புலிச்சேரி பகுதியைச் சேர்ந்த பேபி கணவர் பெயர் மேகநாதன் வயது 23, மற்றும் அவரது வீட்டிற்கு வந்த மறைமலை நகர் பகுதியை சேர்ந்த உறவினர் பெண்ணான மோனிகா வயது 19 ஆகிய இருவரும் துணி துவைப்பதற்காக பாலாற்றங்கரைக்கு சென்றுள்ளனர்.

இதனிடையே துணி துவைத்து விட்டு ஆற்றில் குளித்துள்ளனர் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியுள்ளனர் அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்.

அருகில் இருந்தவர்களின் உதவியுடன் உடலை மீட்டு நெரும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுச் சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதை அடுத்து இரண்டு உடல்களையும் உடற்கூறு ஆய்விற்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பம் குறித்து வழக்கு பதிவு செய்த திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலாற்றில் மூழ்கி இரு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Link
வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுபிரியர்கள்

வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுபிரியர்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

2
3 hrs 31 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved