Also Watch
Read this

இடிந்து விழும் நிலையில், மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ள நிலையில், விரைந்து நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இடிந்து விழும் நிலையில்...
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே செம்மார் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த குடிநீர் தேக்க தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது.

பொது மக்கள் கோரிக்கை
குடிநீர் நீர்த்தேக்க தொட்டியை சுற்றிலும், குடியிருப்புகளும் உள்ளன. தற்போது, இந்த குடிநீர் நீர்த்தேக்க தொட்டியின் கீழ் பகுதி, பலத்த சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், பெரும் விபத்து மற்றும் உயிர்ச் சேதம் ஏற்படும் முன்பு அகற்றிவிட்டு, பொதுமக்களுக்கு புதிய குடிநீர் தொட்டி கட்டி தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved