news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news இலங்கைக்கு காவல் வாகனங்கள் நன்கொடையளித்த இந்தியா
tv

Also Watch

tv

Read this

இலங்கைக்கு காவல் வாகனங்கள் நன்கொடையளித்த இந்தியா

வாகனங்களுக்கு வழிபாடு

5

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இலங்கைக்கு காவல் வாகனங்கள் நன்கொடையளித்த இந்தியா

இந்திய அரசினால், இலங்கை காவல்துறைக்கு 134 ‘கெப்’ ரக வாகனங்கள் நன்கொடையாக, காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இலங்கை அதிபரிடம்...
இந்திய - இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ், இலங்கை காவல்துறையின்
பயன்பாட்டிற்காக இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 134 ‘கெப்’ ரக வாகனங்கள், அதிகாரப்பூர்வமாக இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கப்பட்டு உள்ளன. அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வைத் தொடர்ந்து, இந்த வாகனங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் பயன்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை வட மாகாணத்தில்...
இந்த திட்டத்திற்காக, இந்திய அரசாங்கம் சுமார் 300 மில்லியன் ரூபாய் நிதியைச் செலவிட்டுள்ளது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட இந்த புதிய வாகனங்கள் அனைத்தும், முதற்கட்டமாக இலங்கை வட மாகாணத்தில் உள்ள காவல் நிலையங்களின் தேவைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கு வழிபாடு
இதற்கிடையில், தங்களுக்குப் புதிய வாகனங்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து, வட மாகாணத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள், அந்த வாகனங்களை உள்ளூர் கோயில்களுக்கு கொண்டு சென்றனர். அங்கு வாகனங்களுக்குப் பொட்டு வைத்தும், மாலை அணிவித்தும், தேங்காய் உடைத்தும் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு, தங்களின் பயன்பாட்டை முறைப்படி தொடங்கி வைத்தனர்.

Related Link
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தை

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தை

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிளிங் சென்ற போது தவறி விழுந்த செயற்கை கால்

0
5 mins agoshare
தவறி விழுந்த செயற்கை கால்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved