news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews தவெக நிர்வாகி பதிவால் சர்ச்சை, முற்றுகை
tv

Also Watch

tv

Read this

தவெக நிர்வாகி பதிவால் சர்ச்சை, முற்றுகை

எம்எல்ஏ நேரில் பேச்சுவார்த்தை

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தவெக நிர்வாகி பதிவால் சர்ச்சை, முற்றுகை

குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைத்துவிட்டதாக, தவெக நிர்வாகி வெளியிட்ட பதிவால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

ஸ்டேட்டஸ் வைத்த நிர்வாகி
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வடுக பாளையம் புதூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைக்க வலியுறுத்தி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு முன்னதாக, தவெக ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் என்பவர், பொதுமக்கள் குடிநீர் கோரி, தன்னிடம் முறையிட்டதாகவும் அதனை ஒரு மணி நேரத்தில் திருவள்ளுவர் நகர் பகுதிக்கு குடிநீரை தான் விநியோகித்ததாகவும் கூறி, ஸ்டேட்டஸ் வைத்து உள்ளார்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு
இதைக் கண்ட பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு தண்ணீர் கிடைக்கவில்லை, ஆனால் தண்ணீர் கொடுத்ததாக ஸ்டேட்டஸ் வைத்திருப்பதால், தங்களுக்கு குடிநீர் கிடைக்கப் பெறாமலேயே தவறாக ஸ்டேட்டஸ் வைத்துள்ளதாக குற்றம் சாட்டினர். வட்டார வளர்ச்சி அலுவலர் வருகைக்காக, பொது மக்கள் காத்திருந்த நிலையில், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

எம்எல்ஏ வருகை
இதனை அறிந்த பல்லடம் தவெக சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார், நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டுக் கொண்டு, உடனடியாக இந்த பகுதியில் தெரியாமல் போகும் தண்ணீர் கனெக்சன் எல்லாவற்றையம் கட் செய்து விட்டு, பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி விட்டுச் சென்றார்.

Related Link
விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு கண்டனம், போராட்டம்

விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு கண்டனம், போராட்டம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிளிங் சென்ற போது தவறி விழுந்த செயற்கை கால்

0
4 mins agoshare
தவறி விழுந்த செயற்கை கால்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved