news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews நடிகர் சிலம்பரசன் நடிக்கும் "அரசன்" திரைப்படம்
tv

Also Watch

tv

Read this

நடிகர் சிலம்பரசன் நடிக்கும் "அரசன்" திரைப்படம்

அரசன்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அரசன்

சிம்பு, விஜய் சேதுபதி, அமீர் நடிக்கும் காட்சிகள் படப்பிடிப்பு :

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் "அரசன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது, ECR கடற்கரை பகுதியில் வடசென்னை செட் அமைத்து சிம்பு, விஜய் சேதுபதி மற்றும் அமீர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தாலியில் விடுமுறையை கொண்டாடி வரும் நயன்தாரா :

கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள நயன்தாரா, தற்போது குடும்பத்துடன் இத்தாலியில் விடுமுறையை கொண்டாடி வருகிறார்.

இந்த சூழலில், கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் அவர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாரா தற்போது சல்மான்கானுடன் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் இப்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளார் :

தவெக தலைவர் விஜய் இப்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளதாகவும், விரைவில் எல்லா பிரச்சனைகளையும் சரி செய்வார் எனவும் பாடகர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை எத்தனையோ பேர் ஆட்சி செய்தார்கள் அப்போது பிரச்சனை எதுவும் நடக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம் :

கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், இந்திய திரைப்படத்துறைக்கு நடிகர் மம்மூட்டி ஆற்றிய மாபெரும் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

கேரள ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக வேந்தரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இந்த பட்டத்தை மம்மூட்டிக்கு வழங்கினார்.

‘இதயம் முரளி’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு :

அதர்வா, பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இதயம் முரளி’ திரைப்படம் வரும் ஜூலை 10ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஆகாஷ் பாஸ்கரின் இயக்கியுள்ள இந்த படத்தில் கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Related Link
ரூ.289 கோடி வசூலித்த சூர்யாவின் கருப்பு திரைப்படம்

ரூ.289 கோடி வசூலித்த சூர்யாவின் கருப்பு திரைப்படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிளிங் சென்ற போது தவறி விழுந்த செயற்கை கால்

0
3 mins agoshare
தவறி விழுந்த செயற்கை கால்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved