Also Watch
Read this
By: Manigandan Raja

தடுப்பின் மீது மோதி விபத்து :
சேலத்திலிருந்து சென்னைக்கு கார் ஒன்று சென்றது இந்த கார் உளுந்தூர்பேட்டை அருகே சேலம் பிரிவு சாலையில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த பெயர் பலகைகளை உடைத்துக் கொண்டு சாலையைக் கடக்க நின்று கொண்டு நின்றிருந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஒடபன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் கம்பெனி பாதுகாவலர் மணிகண்டன் தூக்கி வீசியதில் கால் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்துள்ளார் படுகாயம் அடைந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையில் சேர்த்தனர் விபத்துக்குள்ளான கார் சாலையிலே நின்றதால்.
சென்னை சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்தினர் தொடர்ந்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டது இதனை அடுத்து விபத்தை குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved