Also Watch
Read this
By: Manigandan Raja

மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி :
தமிழ்நாடு தீயணைப்பு மீட்புபணிகள் துறை சார்பில் தீயணைப்பு துறை இயக்குநர் சீமா அகர்வால் முன்னிலையில் ஒத்திகை பயிற்சி சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்றது.
உயர் மாடி கட்டிடம் மற்றும் மென்பொருள் நிறுவன கட்டிடங்களில் தீவிபத்து ஏற்பட்டால் எவ்வாறு தன்னையும், நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களையும் காப்பாற்றிகொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார்க்கு சொந்தமான 26 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 20 வது குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு துறையினர் மீட்கும் பணியை தத்ருவமாக செய்தனர்.
அடிக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது என்று குடியிருப்பில் வசிப்பவர் ஒருவர் தீயணைப்பு துறைக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு ஸ்கை லிப்ட் உள்ளிட்ட இரண்டு தீயணைப்பு வாகனத்துடன் சென்று 20 வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தை தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்து, குடியிருப்பில் இருந்தவரை பாதுகாப்பாக ஸ்கை லிப்ட் மூலம் மீட்டு கீழே கொண்டு வந்து முதலுதவி அளித்தனர்.
மேலும் காயமடைந்தவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டு முதலுதவி அளிப்பது போன்றும், ஒருவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்றும் தத்ரூவமாக செய்து காண்பித்தனார்.
மேலும் 280 அடி உயரம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் மொட்டை மாடியில் இருந்து ரோப் மூலம் தரைக்கு இறங்கி அசத்தினார்.
அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் ஏதேனும் தீ விபத்து போன்று ஆபத்து நேரத்தில் அச்சப்படாமல் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் தீயணைப்பு துறையினர் அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved