நாகையில் பெய்த கனமழையால் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். வேதாரண்யம், தலைஞாயிறு, வெள்ளபள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்ததாகவும், ஒரு வார காலமாகியும் கணக்கெடுப்பு பணி தொடங்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர். மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.