Also Watch
Read this
By: Manigandan Raja

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 96 ஆயிரம் ஏக்கரில் குறுவல சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று அரை மணி நேரம் காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக மணல்மேடு 70 மில்லி மீட்டர், கொள்ளிடத்தில் 69.4 மிமீ, சீர்காழி 39மிமீ, மயிலாடுதுறையில் 28மிமீ மழை பதிவாகியது.
இந்த மழை காரணமாக மயிலாடுதுறை நல்லத்துக்குடி, எலுமிச்சம்பாத்தி கோடங்குடி, கொண்டல், கிழாய், வில்லியநல்லூர், பொன்னூர், பாண்டூர், கீழ்மாத்தூர், கிள்ளியூர், மங்கைநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 10,000 ஏக்கருக்கு மேல் அறுவடை செய்ய வேண்டிய குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது.

வயல்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் நெல் தரம் குறைவதுடன் அறுவடை இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்யும் பொழுது நெல்மணிகள் தரையில் சிதறி விளைச்சல் குறையும் என்றும் இயந்திரத்தின் வாடகை அதிகரிக்கும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஏக்கருக்கு 30,000 ரூபாய் செலவு செய்துள்ள நிலையில் செலவு செய்த தொகை கூட கையில் கிடைக்காது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பயிர் காப்பீடு என்ற பெயரில்
காப்பீட்டு நிறுவனங்கள் ஏமாற்றுவதாகவும் அரசே விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved