Also Watch
Read this
By: Manigandan Raja

தமிழகத்தின் முத்திரை சின்னமாக விளங்கக்கூடியது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் நடைபெறும் தேர்த்திருவிழா என்பது இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழகத்தில் மிகப்பெரிய இரண்டாவது தேராக கருதப்படக் கூடிய ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் திருவிழாவிற்காக விருதுநகர் மாவட்டம் முழுவதும் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்.
இந்த நிலையில் இந்த ஆண்டு தேர் திருவிழா கொடியேற்றம் கடந்த ஆறாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வருகின்ற 14ஆம் தேதி நடைபெறும். இந்த நிலையில் பிரம்மாண்ட தேரில் உள்ள அலங்கார துணிகள் சேதமடைந்தும் , அதன் கலர் மங்கியும் காணப்படுவதன் காரணமாக அதன் அலங்கார துணிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து அறநிலை துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன் காரணமாக தற்போது சேதமடைந்துள்ள தேரின் அலங்கார துணிகளை மாற்ற உத்தரவு அளிக்கப்பட்டதன் அடிப்படையில் அலங்காரத்துணிகளை மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆய்வு செய்தார் .மேலும் அலங்கார துணிகளை சேதமடையாமல் பாதுகாக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved