கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையிலிருந்து அத்திப்பாக்கம் சென்று வரக்கூடிய 16H அரசுப்பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் படியில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர். எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென மாணவர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.