Also Watch
Read this
உள்ளாட்சித் தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சீட் கொடுக்க த.வெ.க. ஒன்றியச் செயலாளரிடம் 2 கோடி ரூபாய் மாவட்டச் செயலாளர் பேரம் பேசியதாக சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தன்னை கேட்காமல் எம்எல்ஏவை சந்திக்க செல்வது குறித்தும் தகாத வார்த்தைகளால் மாவட்ட செயலாளர் வசைபாடியதாக கூறப்படும் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

பஞ்சாயத்து தலைவராக ஆசை
திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ள பாலசுப்பிரமணியனுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தலைவராக வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. எனவே, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் கணபதிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்புத் தருமாறு மேற்கு மாவட்ட செயலாளரான ஜி.கே.சங்கரிடம் கேட்டுள்ளார்.

வெளியான ஆடியோ
அதற்கு சங்கரோ, இப்போது பணம் தரவே மறுக்கிறாய், ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட ஒரு கோடி, ரெண்டு கோடி கேட்பேன் எப்படி கொடுப்பாய் என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தகாத வார்த்தையால் திட்டு
மேலும், பல்லடம் எம்எல்ஏ அழைப்பின் பேரில் பாலசுப்பிரமணி அவரை சந்திக்கச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதையறிந்த சங்கர், தன்னை கேட்காமல் எப்படி எம்எல்ஏவை சந்திக்கச் செல்லலாம் எனக் கூறி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது தொடர்பான ஆடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த ஆடியோ விவகாரம் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமல்லாது பொது மக்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved