திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபத்தன்று பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மண்சரிவு தொடர்பாக வல்லுநர்கள் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்திருப்பதாகவும், அதில், அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் மலையேற அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.