news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆத்தா உன் கோயிலிலே....
tv

Also Watch

tv

Read this

ஆத்தா உன் கோயிலிலே....

விருதுநகர்

55

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
vnr(1)

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பூக்குழி இறங்கும் திருவிழா வெகு விமர்சை
ஸ்ரீவில்லிபுத்தூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் பூக்குழி இறங்கும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.இத்திருவிழாவில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விரதம் இருந்து பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

பெரிய மாரியம்மன் கோயில் கொடியேற்றம்
இந்நிலையில் இந்த வருடத்திற்கான பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியான இன்று கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக பெரியமாரியம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று முக்கிய வீதிகளின் வழியாக கொடி மரப்பட்டங்கள் மேளதாளங்கள் முழங்க கோயிலுக்குள் எடுத்துவரப்பட்டது. இதனை தொடர்ந்து வரும் மார்ச் 18 ஆம் தேதி பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.

1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு
பக்தர்கள் 12 நாள்கள் விரதம் இருந்து தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். மேலும் பூக்குழி இறங்கும் திருவிழாவை முன்னிட்டு அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும்.மேலும் 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பங்குனி மாதத்தில் 12 நாட்களும் பெரிய மாரியம்மன் கோயிலில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Link
தமிழக வரலாற்றில் முதன்முறையாக.... நாங்க போட்டியிடுறோம்

தமிழக வரலாற்றில் முதன்முறையாக.... நாங்க போட்டியிடுறோம்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொச்சி முதல் லட்சத்தீவு வரை விரைவில் நீர் விமான சேவை

1
37 mins agoshare
Water travel








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved