news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தமிழக வரலாற்றில் முதன்முறையாக.... நாங்க போட்டியிடுறோம்
tv

Also Watch

tv

Read this

தமிழக வரலாற்றில் முதன்முறையாக.... நாங்க போட்டியிடுறோம்

மதுரை

2654

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
mdu(4)

மேலூரில் நடைபெற்ற விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்: நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முல்லை பெரியாறு - ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மேலூரில் சுயேட்சையாக போட்டியிட முடிவு...
தலைவர் முருகன் சுயேட்சையாக போட்டியிட முடிவு
மேலூரில், பெரியாறு - வைகை ஒருபோக பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது.இதில், மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், முல்லை பெரியாறு மற்றும் வைகை அணை நீர் மட்டத்தை உயர்த்துவதற்காக முயற்சி மற்றும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விவசாய சங்கங்களின் கோரிக்கை குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இதில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மேலூர் தொகுதியில் விவசாய சங்கம் சார்பில், முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்க தலைவர் முருகன் சுயேட்சையாக போட்டியிடுவது, அதற்காக கிராமம் தோறும் விவசாயிகளை ஒன்றிணைத்து மக்களை சந்திப்பது என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிப்பு
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஒருபோக பாசன விவசாயிகள் சங்க தலைவர் முருகன், முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து போராடி வருகின்றோம். அதேபோல் வைகை அணையில் 20 அடி உயரத்திற்கு தேங்கியுள்ள சகதியை அகற்றி அணையை முழுமையாக தூர்வாரி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும். அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை மூடியுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஆய்வறிக்கையின் படி ரூபாய் 30 கோடியில் சர்க்கரை ஆலை பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் முன்னாள் மற்றும் இந்நாள் ஆளும் கட்சிகள் இரண்டும் விவசாயிகளின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றதாக தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் எங்கள் குரல் எதிரொலிக்கும்
அதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் விவசாயிகளின் சார்பில் ஒருவர் போட்டியிட்டு, வெற்றிப் பெற்று சட்டமன்றத்தில் எங்களது கோரிக்கையை வலியுறுத்துவோம். அதற்காக விவசாய சங்கத்தின் சார்பில் சுயேட்சையாக போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது 30 ஆயிரம் விவசாயிகள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள நிலையில், அவர்கள் கிராமம் தோறும் மக்களை சந்தித்து ஆதரவு பெற உள்ளோம். அதேபோல் கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய சங்கத்தினர், எங்களது முடிவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கண்டிப்பாக இந்த முறை விவசாய சங்கத்தின் சார்பில், சட்டமன்றத்தில் விவசாயிகளின் குரல் எதிரொலிக்கும் என்று அப்போது தெரிவித்தார்.

Related Link
உண்மையாக சொல்லுங்கள்...

உண்மையாக சொல்லுங்கள்...


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
12 hrs 14 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved