Also Watch
Read this

சென்னை யானைக்கவுனியில் விஷ வாயுவை சுவாசித்த தந்தை, மகன் உயிரிழந்தனர். கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட போது இந்த விபரீதம் நிகழ்ந்தது.
எதிர்பாரா விதமாக...
சென்னை, யானைக்கவுனியில் கிணற்றை தூர் வாரியபோது விஷவாயு தாக்கி தந்தை மற்றும் மகன் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிணற்றில் இறங்கி தூர் வாரும் பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரவி மற்றும் அவரது மகன் அய்யனார் ஆகிய இருவரும் கிணறு தோண்டும் மாற்று தூர்வாரும் பணிகளில் கடந்த 15 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சென்னை கொடுங்கையூர் பகுதியில் தங்கி இவர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.

45 அடி ஆழ கிணற்றில்...
இந்நிலையில், இன்று ஆகஸ்ட் 26ஆம் தேதி, இவர்கள் இருவரும் சென்னை யானைக்கவுனி பகுதியில் கிணற்றை தூர் வாரும் பணிக்காக 45 அடி ஆழக்கிணற்றுக்குள் இறங்கிய போது, அங்கு தேங்கியிருந்த கடுமையான விஷவாயு தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் கிணற்றிலிருந்து இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் குறித்து யானைக்கவுனி காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved